சென்னையில் அதிகபட்சமாக 18 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 39 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு ஏதும் இல்லை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி நேற்றைய நிலவரப்படி 39 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 40க்கும் கீழ் குறைந்துள்ளது. அதைப்போன்று தமிழகத்தில் நேற்றும் சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.மேலும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 30,095 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 39 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 322 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,14,443 ஆக உயர்ந்துள்ளது.மேலும், நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 38,025 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் அதிக பட்சமாக நேற்று சென்னையில் 18 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 23 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு