செங்கல்பட்டு தடுப்பூசி ஆலை குத்தகை ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: கொரோனாவின் 2வது அலை காரணமாக ஏற்பட்டுள்ள தொற்று பரவல் அதிகரிப்பால் அதனை கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்பு மிக மோசமான சூழலில் உள்ளது. இதனால், மாநிலங்களுக்கு தடுப்பூசி தேவையும் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு விடுவது குறித்து நேரடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதற்காக, ஒன்றிய அரசையும் நிர்பந்தம் செய்ய முடியாது. அதனால், செங்கப்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு கேட்பது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடக்கோரி ஒரு புதிய மனுவை தாக்கல்  செய்யலாம். அதற்கு மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது,’ என தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மனு திரும்ப பெறப்பட்டது….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்