சூளகிரியில் பொதுமக்களை விரட்டி அச்சுறுத்தும் குரங்குகள்: பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

சூளகிரி: சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை தெரு, வாணியர் தெரு, கீழ்தெரு, மூஸ்லீம் தெரு, அண்ணா நகர், கமலா காலனி, காமராஜர் நகர், ஒசூர் கிருஷ்ணகிரி சாலை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இவை வனப்பகுதியையொட்டி உள்ளதால், குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை மற்றும் மாலையில் வீட்டின் திண்ணை மற்றும் ஜன்னல்களை ஆக்கிரமிக்கும் குரங்குகள், சமையல் அறைக்கு சென்று அங்கு உள்ள தின்பண்டங்களை சாப்பிட்டு விடுகிறது. மேலும், உணவு பண்டங்களை தூக்கி செல்வது, மிரட்டுவது என குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. குரங்குகளுக்கு பயந்து இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், வீட்டை எப்போதும் பூட்டியே வைத்துள்ளனர். மேலும், வாழை, தென்னை, காய்கறிகளை நாசப்படுத்துகின்றன. எனவே, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை