சூயஸ் நிறுவனத்தை கண்டித்து கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்

 

கோவை: கோவை மாநகராட்சி 28வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கண்ணகி ஜோதிபாசு. இவர் நேற்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சூயல் குடிநீர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘28வது வார்டுக்குட்பட்ட ஆவாரம்பாளையம் உள்ளிட்ட வார்டு பகுதிகள் முழுவதிலும் சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டன. சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து பல மாதங்கள் ஆகியும் சூயஸ் நிறுவனம் மீண்டும் சாலை அமைத்து தரவில்லை. பலமுறை வலியுறுத்தியும் சாலைகளை பணிகள் செய்யப்படவில்லை.

எனவே சாலை பணிகளை மேற்கொள்ளும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்’’ என்றார். இந்நிலையில் சூயஸ் அதிகாரிகள் கவுன்சிலர் கண்ணகி ஜோதிபாசுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை அவர் முடித்து கொண்டார். மேலும் 28வது வார்டு பகுதியில் சாலை பணிகள் சூயஸ் நிறுவனம் சார்பாக துவங்கப்பட்டுள்ளது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து