சூட்டால் சூடுபிடித்தது இளநீர் வியாபாரம்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரவில் குளிர் அடித்து வந்தாலும் பகலில் கோடை வெயிலை போல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.  நாளுக்கு நாள் வெயின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகள், முதியவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கத்தால் திண்டுக்கல் திருச்சி சாலையில் இளநீர், குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. பெங்களூரு, தர்மபுரி பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள், விற்பனைக்காக அதிகளவு குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இளநீரும் அதிகளவு விற்பனைக்கு வந்துள்ளது. திருச்சி சாலை, அஞ்சலி ரவுண்டானாவில் உள்ள சாலையோர கடைகளில் ஒரு இளநீர் ரூ.35க்கும், தர்பூசணி ஒரு கிலோ ரூ.30க்கும், சர்பத் ரூ.10 முதல் ரூ.30 வரைக்கும் விற்பனையாகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இளநீர், தர்பூசணி பழம், ஜூஸ் வாங்கி பொதுமக்கள் பருகி வருகின்றனர்.இதுகுறித்து வியாபாரி சங்கர் கூறியதாவது, ‘திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் தென்னந்தோப்புகள் உள்ளன. கடந்தாண்டு, தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்தது. ஆனால், இந்தாண்டு விலை குறைந்ததால் பெரும்பாலானவர்கள் இளநீருக்கு, காய்களை விற்பனை செய்ய முன் வந்துள்ளனர். தோட்டத்திலேயே ஒரு காய் ரூ.20க்கு விற்கின்றனர். மரம் ஏறவும், காய்களை எடுத்து வரவும், ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்ல வண்டி வாடகை என அனைத்துக்கும் ரூ.10 செலவாகிறது. அதற்கு மேல் நாங்கள் ஒரு காய்க்கு ரூ.5 லாபம் வைத்து ரூ.35க்கு விற்பனை செய்கிறோம்’ என்றார்….

Related posts

கொடைக்கானல் அருகே நிலத்தில் 300 அடி நீளத்திற்கு பிளவு

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு : பதில்தர ஆணை

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை: அமுல் நிறுவனம் விளக்கம்!