சுவேந்துவின் குடும்பத்தினருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அதிகாரமிக்க தலைவராக இருந்த சுவேந்து அதிகாரி அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக  போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். இவருக்கு மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.இந்நிலையில் சுவேந்து அதிகாரியின் தந்தை சிசிர் குமார் அதிகாரி மற்றும் சகோதரர் திப்யேந்து ஆகியோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. அவர்கள் இருவருக்கும் மிரட்டல்கள்  வந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிசிர் குமார், கன்தி மக்களவை தொகுதி உறுப்பினராகவும், திப்யேந்து அதிகாரி தம்லுக் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளனர்….

Related posts

மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர்களை ஓட ஓட விரட்டிய மாணவர்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பா.ஜ.க முயற்சி: புள்ளியியல் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம்

குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்