சுற்றுலா பயணிகள் பங்கேற்கும் பொங்கல் விழா

 

மதுரை, ஜன. 13:தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில், ஜன.16ம் தேதி திருப்பரங்குன்றம் அருகே துவரிமான் கிராமத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ளும் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதன்படி அன்று காலை 9 மணியளவல் மதுரை சுற்றுலா அலுவலகத்திலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் சிறப்பு பஸ் மூலம் துவரிமான் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பிறகு கிராம மக்களுடன் சேர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் விழா கொண்டாடுகின்றனர்.

இரண்டாம் நாளாக ஜன.17ல் அலங்காநல்லூருக்கு வெளிநாட்டு பயணிகளை அழைத்துச்சென்று பார்வையாளர் மாடத்தில் இருந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும், 0452-2334757 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தகவல் அறியலாம் என்று கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை