சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு முகக்கவசம் : சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவுரை

ஊட்டி:  தமிழகத்தில்  அனைத்து சுற்றுலா தலங்களிலும் முகக்கவசம் அணிய சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை  வழங்கப்படும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், மீண்டும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படக்  கூடும் என மருத்துவத்துறை அச்சம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,  தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், குறிப்பாக சுற்றுலா  தலங்களில் முகக்கவசம் அணிய சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுரை  வழங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், புதிய வகை கொரோனா மீண்டும் சீனாவில் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர்  ஆலோசனையின் பேரில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் அனைவரும் முகக்கவசம்  அணிந்து வர அறிவுரை வழங்கப்படும். முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து  சுற்றுலா தலங்களிலும் கிருமி நாசினிகள் வைக்கவும், கை கழுவவும் அறிவுறுத்தப்படும், என்றார்….

Related posts

காலை 10 மணி வரை தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பிரேக் பழுது காரணமாக பல்லவன் விரைவு ரயில் பாதிவழியில் நிறுத்தம்

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு