சுற்றுச்சூழல் தினம் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்கின்றனர். பின்னர், கடற்கரைக்கு சென்று பல்வேறு தின்பண்டங்களை சாப்பிட்ட பின்னர் குப்பைகளை தொட்டியில் போடாமல் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், கடற்கரையின் அழகு கெட்டு, குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று மாமல்லபுரத்தை சேர்ந்த அபிராமி யோகாலயா சார்பில், அதன் நிறுவனர் சுரேஷ்பாபு தலைமையில் 30க்கும் மேற்பட்ட யோகா கலைஞர்கள், பொதுமக்கள் கடற்கரை கிடந்த இளநீர் மட்டைகள், பிளாஸ்டிக் பைகள், காகிதங்கள், காலணிகள், வாட்டர் பாட்டில்களை சேகரித்தனர். பின்னர், கடற்கரை மணலில் உலக வரைபடம் வரைந்து அதனை சுற்றி குப்பைகளை தரம் பிரித்து வைத்து பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. குப்பைகளை, தொட்டியில் போட வேண்டும். மேலும், கடற்கரை மற்றும் தாங்கள் வசிக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி யோகா கலைஞர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்….

Related posts

மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும் அதானி – அம்பானி பெயர் மட்டுமே தெரிகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு

பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டினால் ₹5000 அபராதம் அமல்: திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை