சுரங்கத்தில் நிலச்சரிவு லாரிகள் புதைந்து 4 தொழிலாளர் பலி: மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கினர்

பிவானி: அரியானாவில் சுரங்க பணி நடக்கும்  இடத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 6க்கும் மேற்பட்ட லாரிகள் புதைந்து 4 பேர் பலியாகினர். மேலும், பலர் புதைந்துள்ளனர். அரியானா மாநிலம், பிவானி மாவட்டம், தாதம் என்ற இடத்தில் சுரங்கப் பணிகள் நடக்கின்றன. இங்கு நேற்று காலை 6க்கும் மேற்பட்ட டிரக்குகள் மண் ஏற்றிக் கொண்டிருந்தன. அவற்றில் பிரமாண்ட பொக்லைன் இயந்திரங்கள் மண்ணை தோண்டி நிரப்பிக் கொண்டிருந்தன. அப்போது. திடீரென பெரிய பாறைகளும், மண்ணும் சரிந்தன. அதில் லாரிகளும், பொக்லைன் இயந்திரங்களும் புதைந்தன. அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அதில் சிக்கினர். மீட்புப்படைகள் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டன. இதில், பீகார், அரியானா மாநிலங்களை சேர்ந்த 4 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இன்னும் 4 அல்லது 5 பேர் மண்ணில் புதைந்திருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதை விட அதிகம் பேர் புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர். தேசிய பேரிடர் மீட்புக்குழு, ராணுவம் ஆகியவையும் கூடுதலாக அழைக்கப்பட்டு, மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பல மணி நேரமாகி விட்டதால்  பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு 5 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர்….

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு