சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்

தர்மபுரி, மே 4: இலக்கியம்பட்டி ஊராட்சியில், 4 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் ஜோராக நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், கோடை வெயில் காரணமாக குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, பாட்டில் தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளது. வசதி படைத்தவர்கள் தங்களது வீடுகளில், ஆர்ஓ பிளான்ட் பொருத்தியுள்ளனர். அவ்வாறு ஆர்ஓ பொருத்த வசதியில்லாதவர்கள் பேக்கிங் குடிநீரை கேன்களில் வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஊரக வளர்ச்சி முகமை சார்பில், இலக்கியம்பட்டி ஊராட்சி மூலம் செந்தில்நகர், இலக்கியம்பட்டி, நீச்சல்குளம், கருவூல காலனி ஆகிய 4 இடங்களில், பொதுமக்கள் தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி ஆர்ஓ கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த குடிநீர் கருவி மூலம் ஏராளமான வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் பிளாஸ்டிக் கேன்கள், குடங்கள் மூலம் குடிநீரை பிடித்து செல்கின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை