சுதந்திரதின விழாவில் விருது மாற்றுத்திறனாளிகளின் பட்டியல் வெளியீடு

சென்னை: இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குவதற்கென, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள் / நிறுவனங்களை தேர்வு குழு ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னசென்ட் திவ்யா மற்றும் சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோரும், சிறந்த தொண்டு நிறுவனமாக ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி, சிறந்த சமூகப்பணியாளராக நாகர்கோவிலைச் சேர்ந்த மரிய அலாய்சியஸ் நவமணி, சிறந்த மருத்துவராக பத்மப்ரியா, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் வி ஆர் யுவர் வாய்ஸ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் விருது வழங்கப்படும்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்