சுகாதாரமற்ற 5 உணவகங்களுக்கு அபராதம் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, ஜூலை 24: திருவண்ணாமலையில் சுகாதாரமற்ற முறையில் உணவகம் நடத்திய 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே சாலையோரம் சிறுசிறு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் தரமற்ற முறையில் உணவு சமைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், திருவண்ணாமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில் சிக்கையராஜா தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 4 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு சமைத்து விநியோகம் செய்தது தெரிய வந்தது. மேலும், ஒரு கடையில் கலப்பட டீ தூள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 5 கடைகளுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும், தொடர்ந்து இதுபோன்ற தவறுகள் கண்டறியப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு