சுகாதாரமற்ற தின்பண்டங்கள் விற்ற கடைக்கு அபராதம்

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூரில் சுகாதாரமற்ற முறையில் தின் பண்டங்கள் விற்பனை செய்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் பிற கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்வதாகவும், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் பான் மசாலா, சிகரெட் விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால்,  சோழிங்கநல்லூர் பகுதியில், செங்கல்பட்டு மாவட்ட உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா மற்றும் ஊழியர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள தேநீர் கடையில் ஆய்வு செய்தபோது, உணவுத்துறை சார்பில் வழங்கும் சான்று பெறாமல் சுகாதாரமற்ற முறையில் கடை நடத்தியது தெரியவந்தது. மேலும், கல்லூரி அருகே உள்ள கடையில் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்றதால் அங்கு ஏராளமானோர் புகை பிடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து, கடையின் உரிமையாளரை அழைத்து எச்சரிக்கை செய்து, அபராதம் விதித்தனர். இங்கு புகை பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்