சுகாதாரத்துறையினர் தீவிரம் கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை தீயணைப்புதுறையினர் மீட்பு

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். கறம்பக்குடி அருகே மழையூர் வளங்கொண்டான் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. விவசாயி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்ற போது அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இது குறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ)மணிவண்ணன் தலைமயில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர். இதையடுத்து தீயணைப்பு துறையினரை பொது மக்கள் பாராட்டினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை