சீர்காழி-வடரங்கத்திற்கு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

சீர்காழி : சீர்காழியிலிருந்து வடரங்கம் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் கோவில்பத்து, வள்ளுவகுடி, கொண்டல், பணங்காட்டாகுடி, எலத்தூர், வடரங்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயணம் செய்து கல்லூரி பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள் காலை மாலையில் வீடு திரும்பும்போது சீர்காழியில் இருந்து வடரங்கம் செல்லும் பேருந்தில் பயணம் செல்ல வேண்டியுள்ளது. அப்படி செல்லும் போது மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ்சில் படியில் தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றன. படிக்கட்டுகளில் தொங்கியவாறு கூட்டம் அதிகமாக இருப்பதால் பேருந்தில் ஏற முடியாமல் மாணவர்கள் நடந்து செல்லும் பரிதாப நிலை இருந்து வருகிறது. சில சமயங்களில் மாணவர்கள் பேருந்தில் இருந்து தவறி விழும் சம்பவமும் நடந்து வருகிறது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி செல்லும் நேரத்திலும், பள்ளிகள் விடும் நேரத்திலும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என மாணவ- மாணவிகள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி