சீர்காழி நகராட்சி பகுதியில் கடைகளில் 80 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

சீர்காழி, ஜூலை 30: சீர்காழி நகராட்சி பகுதியில் கடைகளில் 80 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பைகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் சீர்காழி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சங்கர், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆலோசனை பேரில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகள் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு பாலித்தின் பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பாலித்தீன் பைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகளுக்கு பொருள் வாங்க செல்லும் பொதுமக்கள் துணி பையை பயன்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்