சீர்காழி கழுமலையாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை

சீர்காழி : சீர்காழி கழுமலையாற்றில் ஆகாயத் தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே கழுமலையாறு செல்கிறது. இந்த ஆறு பாசனத்திற்கும், வடிகாலாகவும் பயனளித்து வருகிறது. இந்த ஆற்றில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தி திட்டை தில்லைவிடங்கன் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய பணிகளை செய்து வருகின்றனனர். தற்போது இந்த ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.ஆனால் புதிய பேருந்து நிலையம் பாலம் அருகே ஆகாயத்தாமரை அதிக அளவில் படர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் சரிவர செல்லவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாயிகள் நலன் கருதி ஆற்றில் படர்ந்து கிடக்கும் ஆகாயத் தாமரையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!