சீர்காழி அருகே வானகிரியில் மணல் குவாரியை தடை செய்ய வேண்டும்

 

சீர்காழி, ஜூலை 24: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கிராமத்தில் டாப்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் மணல் குவாரி அமைத்து மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சட்ட விதிமுறைகளுக்கு மீறி 5 அடி ஆழம் வரை மண்வெட்டி எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஏரிப்போல் காட்சியளிக்கிறது. ஆழமாக மண் எடுப்பதால் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது.

இதனால் மேச்சலுக்கு செல்லும் கால்நடைகள், சிறுவர்கள், முதியோர்களுக்கு பேராபத்து ஏற்படும் நிலை இருக்கிறது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த மா மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரியை உரிய விசாரணை நடத்தி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கும், தமிழக முதல்வருக்கும் டாப்சி செயலாளர் ராஜி கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்