சீர்காழி அருகே திருவாலி ஏரி நிரம்புகிறது: விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி: சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் சுமார் 132 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது.இந்த ஏரி 17 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கு வரும் தண்ணீரை பயன்படுத்தி திருவாலி புதுத்துறை, திருநகரி மண்டபம், நெப்பத்தூர், தென்னாம்பட்டினம் கிராமங்களில் சுமார் 12,000 ஏக்கரில் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டு மேட்டூர்அணை பாசனத்திற்கு மே 24 தேதி திறக்கப்பட்ட நிலையில் தற்போது திருவாலி ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் வந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்னும் சில நாட்களில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஏரி விரைவாக நிரம்பி வருவதால் விவசாயிகள் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை