சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சொந்த செலவில் கல்வி உபகரணங்கள்

 

சீர்காழி, ஜூன் 21: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய விவசாய குடும்பங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த புங்கனூர் திமுக ஒன்றிய கவுன்சிலர் சோனியா காந்தி இளமுருகன், அப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கு உதவ வேண்டும் என எண்ணி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் ராஜாவின் ஆலோசனையின் பேரில், அங்கு கல்வி பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கல்வி உபகரணங்களான நோட்புக், பேனா, பென்சில், ஜாமன்டரிபாக்ஸ், வாட்டர் கேன், தட்டு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி வாட்டார கல்வி அலுவலர் தமிழ்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, தலைமை ஆசிரியர் ராஜா, பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை