சீர்காழியில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது

 

சீர்காழி, ஜூன் 8: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை கிராமத்தில் தங்க ராஜா என்பவரது வீட்டின் எதிரே அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுகளுக்கு இடையே கொடிய விஷம் கொண்ட நான்கு அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு மறைந்து இருந்தது.

இதை கண்ட தங்க ராஜா குடும்பத்தினர் உடனடியாக பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற பாண்டியனுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் அங்கு சென்ற பாண்டியன் விறகுகளுக்கு இடையே மறைந்திருந்த கண்ணாடி விரியன் பாம்பை லாபகமாக பிடித்து வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று விட்டார். பாம்பு பிடிபட்டதால் தங்க ராஜா குடும்பத்தினர், அருகில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி