சீருடை பணியாளர் தேர்வு: சிறப்பு ஒதுக்கீட்டிற்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

 

திருவாரூர், ஆக. 25: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் முன்னாள் படைவீரர்கள் சீருடை பணியாளர் தேர்வு சிறப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 2ம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), 2ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 3 ஆயிரத்து 359 காலிபணியிடங்களில் ஆண்கள் பிரிவினருக்கு 2 ஆயிரத்து 576 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி 129 காலிபணியிடங்கள் ஆகும்.

எனவே, திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் 01.07.2023-ல் 47 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டுமெனவும், விருப்பமும் தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையவழி வாயிலாக அடுத்த மாதம் (செப்டம்பர்) 17ம் தேதி-க்குள் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்த விவரத்தை திருவாரூர் கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும்,விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04366-290080 என்ற தொலைபேசி மூலமாகவே தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து