சீரான குடிநீர் வழங்க கோரி மக்கள் மறியல்

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி, துட்டம்பட்டி பைபாஸ் சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாரமங்கலம் ஒன்றியம், துட்டம்பட்டி ஊராட்சியில் ஆட்டையான் வட்டம், புதுக்குடியான் வட்டம், கொடியன் வளவு உள்ளிட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை எனக் கூறி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துட்டம்பட்டி- பைபாஸ் சாலையில் காலை குடங்களுடன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில், தாரமங்கலம் போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, எங்கள் பகுதியில் 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாகவும், இதனால் பாதிக்கப்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தற்போது ஊராட்சியில் அனைவருக்கும் குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதால் சீரான குடிநீர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதிகாரியிடம் பேசி குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஓமலூர்- ஈரோடு மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடிகால் அமைக்கும் பணிசங்ககிரி: சங்ககிரி பேரூராட்சி வார்டு 1ல், அண்ணா நகர், வேல்முருகன் நகர், பொந்து கிணறு, வார்டு 6ல், தேர் வீதி, அக்ரஹாரம், கடைவீதி, வார்டு 16ல், பக்காளியூர் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹1.94 கோடி மதிப்பீட்டில் தார்சாலை மேம்பாடு மற்றும் வார்டு 12ல், ₹2.60 கோடி மதிப்பில், தூய்மை பணியாளர் குடியிருப்பு முதல் திருச்செங்கோடு மெயின்ரோடு வரை வடிகால் அமைத்தல் மற்றும் பச்சகாடு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழு உறுப்பினர் தங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரம், பேரூராட்சி மன்ற தலைவர் மணிமொழி முருகன், அருண்பிரபு, சுலைமான் சேட், அருணாரவி, சின்னப்பொண்ணு, கங்கா, சந்திரா, கவிதா, சத்யா, கனகராஜ், குமார், நிர்மலா, மாணிக்கம், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி