சிவகிரி சந்தன மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

 

சிவகிரி,ஆக.19: சிவகிரி சந்தனமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அக்னி சட்டி மற்றும் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு தீர்த்த குடம், பால்குடம் எடுத்து வந்து அபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 108 சங்காபிஷேகம், மதியம் மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை அக்னி சட்டி, முளைப்பாரி ஏந்தி ஏராளமான பக்தர்கள் சிவகிரி நகரின் நான்கு ரத வீதி வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் அய்யப்பன், சக்கரவர்த்தி விநாயகர், தங்கம், சிவா, ஆலய பூசாரி முத்தம்மாள் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி