சிவகாசி மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் அலுவலகம் கட்டும் பணி விறுவிறுப்பு: நவீன வசதிகளுடன் தயாராகிறது

 

சிவகாசி, ஆக.7: சிவகாசி மாநகராட்சி கட்டிடம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021ல் சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகாசி மாநகராட்சி அலுவலகம் தற்போது சிவகாசி- திருவில்லிபுத்தூர் சாலையில் 2 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதில் போதிய வசதிகள் இல்லாத நிலையில் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனை தொடர்ந்து சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே புள்ளைக்குழியில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. புதிய கட்டிட பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். புதிய கட்டிடப்பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள காலக்கட்டத்திற்குள் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை அமைச்சர் தங்கம்தென்னரசு கேட்டுக்கொண்டார்.

புதிய அலுவலக கட்டிட பணிகள் தற்போது படுஜரூராக நடைபெற்று வருகின்றது. கடடிட பணிகள் 18 மாதங்கள்வரை ஆகும் என்ற நிலையில் தற்போதுவரை சுமார் 15 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. புதிய அலுவலக கட்டிடம் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய அடித்தளம் 1501.97 சதுர அடியிலும், தரைத்தளம் 1647.10 சதுர அடியிலும் முதல் தளம் 1403.80 சதுர அடியிலும், மேல்தளம் 179.47 சதுர அடி என மொத்தம் 4732.34 சதுரடி பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றது.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்