சிவகாசி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

சிவகாசி, மே 11: சிவகாசி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேற்று ஆய்வு செய்தார். சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் லட்சுமியாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தொடக்கப்பள்ளி கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து போஸ் காலனியில் ரேஷன் கடையில் ரேஷன் விநியோகம் குறித்தும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து விஸ்வநத்தம் ஊராட்சியில் சிவகாமிபுரம் காலனியில் செயல்படும் நுண்உரம் தயாரிப்பு கூடம் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி, நிர்வாகப் பொறியாளர் இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, தேவஆசிர்வாதம், தாசில்தார் லோகநாதன், நாரணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன், விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்நாகராஜ், ஊராட்சி செயலாளர் செல்வம், திமுக ஒன்றிய கவுன்சிலர் சின்னத்தம்பி மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

 

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி