சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாவிற்கான விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜூலை 8: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாவிற்கான விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாட்டத்தில் தமிழக அரசு சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா தலங்களை மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் உணவுடன் கூடிய தங்கும் விடுதி மற்றும் வீட்டில் தங்கும் விடுதி, சாகச சுற்றுலா நடத்துபவர்கள் போன்ற சுற்றுலா தொழில் முனைவோர் தமிழ்நாடு சுற்றுலா துறையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி http:tntourismtours.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகக்கப்பட்டதும் பதிவு சான்றிதழை இணைய தளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை