சிவகங்கையில் கோடை கால ஹாக்கி பயிற்சி நிறைவு விழா

சிவகங்கை, மே 31: சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த ஹாக்கி கழகம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக கோடை காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஹாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி கடந்த ஏப்.28 முதல் மே 29 வரை சிசிவகங்கை நகரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம், ஜஸ்டின் பள்ளி, சுவாமி விவேகானந்தா பள்ளி, காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி உள்பட 4 இடங்களில் நடத்தப்பட்டன.

இதில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவர்களும், 80 மாணவிகளும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிவகங்கை விவேகானந்தா உயர்நிலைப்பள்ளியில் நிறைவு விழா நடத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த ஹாக்கி கழக செயலர் தியாகபூமி வரவேற்புரை ஆற்றினார். தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் சுந்தரமாணிக்கம், பாண்டிவேலு, சட்ட ஆலோசகர் ஜவஹர், பள்ளி நிர்வாகி சங்கரன் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் (ஓய்வு) சின்னையா, மகளிர் ஹாக்கி பொறுப்பாளர் அழகுமீனாள் தேவதாஸ், தொழிலதிபர் அருண் வாழ்த்தினர். மாவட்ட தலைவர் கார்த்திகைசாமி நன்றி கூறினார். முன்னதாக பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்