சில்லிபாய்ன்ட்

* துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த ‘போஸ்பரஸ் குத்துச்சண்டை’ போட்டியில் பங்கேற்ற இந்திய குழுவினர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டுள்ள பயிற்சியாளர்கள் தர்மேந்திர யாதவ், சந்தோஷ் பிர்மோல், வீரர்கள் கவுரவ் சோலங்கி,  பிரயாக் சவுகாக், பிரிஜேஷ் யாதவ் உள்ளிட்டோர் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.* வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை  இடையிலான 2வது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடக்கிறது. முதல் நாள் நேர ஆட்ட முடிவில் வெ.இண்டீஸ் 86 ஓவரில் 7விக்கெட்  இழப்புக்கு 287ரன் குவித்தது. . களத்தில்  99* ரன்னுடன் இருந்த பிரத்வைட் சதமும், 43*ரன்னுடன் இருந்த  மற்றொரு வீரர்  ரகீம் கார்ன்வால் அரைசதமும்   2வது நாளான நேற்று விளாசினர்.  * மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலியிறுதியில் விளையாட ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா), நவோமி ஒசாகா(ஜப்பான்), அர்யனா சபலங்கா(பெலாரஸ்) பியான்கா(கனடா), சாரா சொரிபெஸ்(ஸ்பெயின்), மரியா சக்காரி(கிரீஸ்), அனஸ்டரிஜா(லாத்வியா), எலினா ஸ்விடோலினா(உக்ரைன்) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர்.* மீன் தொட்டியை தூய்மை செய்யும் போது, தொட்டி உடைந்து கண்ணாடி சில்லு ஜோப்ரா ஆர்ச்சரின் கையில் பொத்துக் கொண்டதாம். அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதனால் ஆர்ச்சர் இப்போது கட்டாய ஓய்வில்  உள்ளார்….

Related posts

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி

சில்லி பாயின்ட்…