சிலிண்டர் விலையை குறைக்கக்கோரி சமையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி சமையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இட்லி இனியவன் தலைமை வகித்தார். 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள், அட்டையில் தயாரிக்கப்பட்ட 6 அடி உயர சிலிண்டர் படத்தை வைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சமைக்காத உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மத்திய அரசு ஒரு மாதமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டாக திருமணம், விசேஷ நிகழ்ச்சிகள் குறைந்த எண்ணிக்கையில் நடந்து வருகிறது. இதன்காரணமாக சமையல் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் 500க்கும் வர்த்தக சிலிண்டர் 800 ரூபாய்க்கும் குறைத்து வழங்கவேண்டும். பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை