சிறுமி உயிரிழந்த விவகாரம் குளிர்பான தொழிற்சாலை மூடல்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

புழல்: சென்னை பெசன்ட்நகரை சேர்ந்த சதீஷ் – காயத்ரி தம்பதியின் இளைய மகள் தரணி (13), கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகில் உள்ள மளிகைக்கடையில் டோகிடோ கோலா என்ற குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுமி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்தாள்.தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமி குடித்துவிட்டு மீதம் வைத்த குளிர்பானத்தை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சோழவரம் அடுத்த ஆத்தூரில் உள்ள சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் மாலை பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினர்.பின்னர், சிறுமி குடித்த குளிர்பானத்தின் மாதிரி ஆய்வு முடிவுகள் வரும் வரை குளிர்பான தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர். மேலும், சிறுமி குடித்த குளிர்பானம் தயாரித்த பேட்ஜ் எண் கொண்ட பெட்டிகள் அனைத்தையும் கடைகளில் இருந்து உடனடியாக திரும்ப பெறுமாறு தொழிற்சாலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். குளிர்பான மாதிரி ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் அறிவுரையின் பேரில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை