சிறப்பு டிஜிபி மீதான மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

விழுப்புரம், பிப். 7: சிறப்பு டிஜிபி மீதான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மீண்டும் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சிறப்பு டிஜிபி தினசரி ஆஜராகி தங்கள் திறப்பு வாதத்தை தெரிவிக்க நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டிருந்தார். அதன்படி மூன்று நாட்கள் தங்கள் தரப்பு வாதத்தை தெரிவித்து நிறைவடையாத நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. அவரது தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை நாளை (இன்று) தெரிவிப்பதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை