சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு 25,000 அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சிறப்பு ஆசிரியர்களுக்கான காலி பணியிட நிலவரத்தை அரசு தேர்வாணையத்திற்கு தெரிவிக்காத தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு (எஸ்டிஎம்சி) ₹25,000 அபராதம் விதித்து உயர் நீடிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனும் மத்திய அரசின் அரசாணையை எஸ்டிஎம்சி அலட்சியம் செய்து வருவதாகவும், எஸ்டிஎம்சி பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களுக்கான 1,100 பணியிடம் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளதாகவும் குறை தெரிவித்து தொண்டு நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணையில் தொடர்ச்சி உயர் நீதிமன்ற நீதிபதி நசீன் வஸீரி அமர்வில் நேற்று நடைபெற்றது.அப்போது நீதிபதி கூறியதாவது:சிறப்பு ஆசிரியர்களுக்கான 1,132 காலி பணியிட விவரங்களை டெல்லி துணைநிலை சேவைகள் அரசு பணியாளர் தேர்வு மையத்தில் தெரிவித்து, நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிட அவன செய்யும்படி 3 வாரம் கெடு விதித்து கடந்த மாதம் 18ம் தேதி நீதிமன்றம் அறிவுறுத்தினோம். கெடு முடிவடைந்து மேலும் ஒரு வாரம் ஆகியும், தேர்வாணையத்திற்கு விவரங்களை மாநகராட்சி அளிக்கவில்லை. தெற்கு டெல்லி மாநகராட்சியின் இந்த மெத்தனபோக்கை கண்டித்து 25,000 அபராதம் விதிக்கிறேன். அடுத்த 2 வாரத்துக்குள் அரசு பணியாளர் தேர்வாணையத்திற்க் விவரம் அளித்து, சிறப்பு ஆசிரியர் பணியிட நியமன அறிவிப்பை வெளியிடச் செய்யாவிட்டால், எஸ்டிஎம்சி ஆணையர் நேரில் ஆஜராகி பிப்ரவரி 10ம் தேதி விசாரணையில் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்….

Related posts

தீவிரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் மூன்றாக பிரிக்கப்படும்: காஷ்மீரில் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

உச்சநீதிமன்ற முக்கிய தீர்ப்புகளுக்கு புதிய இணைய பக்கம்

ஐஎன்எஸ் தலைவராக ஷ்ரேயம்ஸ் குமார் தேர்வு