சின்னமனூர் அருகே காட்டாறு கடக்க அகலமாகும் கால்வாய்

சின்னமனூர் : சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ளது வெள்ளையம்மாள்புரம். இங்குள்ள ஒரு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 2010ம் ஆண்டு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 65 வீடுகள் கட்டப்பட்டு, புதிய காலனியாக புஷ்பராணி நகர் உருவாக்கப்பட்டது. இப்பகுதியில் தென்பழனி மலை அடிவாரத்தில் இருந்து மழை பெய்யும் நேரங்களில் காட்டாற்று வெள்ளம் வரும். அப்போது இப்பகுதி வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இங்குள்ள குறுகிய கழிவுநீர் கால்வாயை பெரிய கால்வாயாக கட்டி வீட்டிற்குள் மழைநீர் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அரை கிமீ தூரத்திற்கு உள்ள குறுகிய கால்வாயை ஆழமான, அகலமாக கால்வாயாக மாற்றும் பணி துவங்கியது. இப்பணிகள் விரைவில் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்