சின்னசேலம் அருகே வயல்வெளியில் சாய்ந்த நிலையில் மின்கம்பம்-உயிர் பலி ஏற்படும் அபாயம்

சின்னசேலம் :   சின்னசேலம் அருகே வயல்வெளியில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா பகுதியில் வயல்வெளி நடுவில் ஓரிரு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பங்கள் வயல்வெளியில் உள்ளதால் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் பூமி நெகிழ்ந்து சாய்ந்து விடுகிறது. அதைப்போல சின்னசேலத்தில் இருந்து செல்லியம்மன் கோயில் வழியாக தோட்டப்பாடி செல்லும் வழியில் ஏரிக்கு மேற்கே ராசேந்திரன் என்பவரது வயலில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த கம்பம் கடந்த 3 மாதங்களுக்கு மேலாகவே சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்தால் மின்சாரம் செல்லும் கம்பி கீழே சாய்ந்து பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் உயிர் பலி சேதம் ஏற்படும். எனவே இப்பகுதி மக்களின் நலன்கருதி மின்வாரிய அதிகாரிகள் அந்த கம்பத்தை நிமிர்த்தி நடுவதற்கு முன்வர வேண்டும். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன் மின்வாரிய உயர் அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள கம்பத்தை சரிசெய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்….

Related posts

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை தீர்ப்பு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் ‘மேரிகோல்டு’: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு