சித்திரை பௌர்ணமியையொட்டி செல்லியம்மன் கோயிலில் பொங்கல் வைக்கும் விழா

அரியலூர், மே 5: சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு செல்லியம்மன் கோயிலில் நடந்த பொங்கல் வைக்கும் விழாவில் 50 கிராமத்தினர் பங்கேற்று தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம், ஜெ.தத்தனூரில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு பொங்கல் வைக்கும் விழா செல்லியம்மன் ஆலய மேம்பாட்டுக்குழு சார்பில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கிராம மக்கள் அனைவரும் கடும் வெயில் சுட்டெரிப்பதால் மழைவேண்டியும் விவசாயம் செழிக்கவும், ஆடு மற்றும் மாடுகள் நோயின்றி வாழ வேண்டி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஊர்நாட்டார்கள் தேவேந்திரன், சின்னதுரை, கந்தசாமி, நீலமேகம், அன்பரசன், சங்கர், எழிலரசன், தனம், சின்னப்பிள்ளை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் விரைவில் ஆலய மேம்பாட்டு குழு சார்பில் ஆலய திருப்பணி தொடங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை