சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

சிதம்பரம்: சித்தபரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த மோகுர் கிராமத்தில் 4 இடங்களில் NECL நிறுவனம் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் போனிகள் நடைபெற்று வருகிறது. இதுக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் பணிகளை நிறுத்தக்கோரி அதிகரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுதொடர்பாக தங்கள் மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பபெறக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட பொதுமக்கள், காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் பேருருராட்சி பகுதிகளை பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்த விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை எப்படி விட்டுத்தர முடியும் என கேள்வி எழுப்பினர். ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான உரிய உத்தரவு நகல்களை காமிக்குமாறு சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அதன் பின்னரே பணிகளை தொடர முடியும் என அவர்கள் அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கழிந்து சென்றனர். …

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்