சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் 81,001 கோடியாக உயர்வு: லாபம் 383 கோடியாக அதிகரிப்பு

சென்னை: சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் 81,001 கோடியாக அதிகரித்துள்ளது என்றும், மொத்த லாபம் 383 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் 201-22ம் நிதியாண்டில் முதல் காலாண்டு கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் காமகோடி அறிக்கையாக நேற்று வெளியிட்டார்.  அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:  நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வியாபாரம் 81,001 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் வைப்பு தொகை 44,606 ேகாடியாகவும், கடன்கள் 36,395 ஆகவும் உள்ளது. வங்கியின் மொத்த லாபம் 383 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் நிகர லாபம் 173 ேகாடியாக உள்ளது. வங்கியின் நிகர வராக் கடன் 3.49 சதவீதமாக உள்ளது. மேலும் வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.29 சதவீதமாக உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஒத்த காலாண்டில் இருந்த மதிப்பான 5,355 கோடியில் இருந்து 5,952 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி இதுவரை 702 கிளைகளையும், 1,727 ஏடிஎம் பண பட்டுவாடா இயந்திரங்களையும் கொண்டு இயங்கி வருகிறது. வங்கியின் அனைத்து வசதிகளும் கூடிய மொபைல் பேங்கிங் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைலில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி மொபைல் எண் பிணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் மட்டுமே வங்கி பரிவர்த்தனை செய்ய முடியும். உடனடி பண பரிமாற்ற  வசதி மொபைல் மற்றும் நெட் பேங்கிங்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளர் பெயரை சேர்க்காமலேயே 10,000 வரை பண பரிமாற்றம் செய்ய முடியும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்