சிக்ரியில் புதிய இயக்குநர் நியமனம்

 

காரைக்குடி, மே 3: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் (சிக்ரி) புதிய இயக்குநராக முனைவர் ரமேஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேதியியல் துறையில் முதுகலை அறிவியல் பட்டம், திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு ரசாயனவியல் சார்ந்த ஆராய்ச்சிக்காக இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். லித்தியம் அயன் மின்கலங்கள் மற்றும் திண்ம நிலை மின்கலங்கள் போன்ற எதிர்கால சாதனங்கள் குறித்த துறைகளில் திறன் பெற்றவர்.

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகம் ஆகியவற்றில் முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளார். காரைக்குடி சிக்ரியில் 2008ம் ஆண்டு விஞ்ஞானியாக தனது பணியை துவக்கி, தற்போது மூத்த முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இந்திய அறிவியல் நிறுவனத்தில் சிறந்த முனைவர் ஆய்வறிக்கைக்கான கெ.பி.ஆபிரகாம் பதக்கத்தை பெற்றுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி இதழ்களில் 91 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கார்னெட் என்ற திடமின்பகு பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட திண்ம நிலை லித்தியம் அயன் மின்கலன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை