சிகிச்சைக்காக காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்சிலேயே 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். சென்னை, ராஜிவ்காந்தி அரசு  மருத்துவமனையில் நேற்று முன்தினம்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் காத்திருக்கும் போதே 4பேர் உயிரிழந்தனர். அதைப்போன்று நேற்றும் ஏராளமான ஆம்புலன்சுகள் மருத்துவமனை முன்பு காத்திருந்தன. ஆம்புலன்சுகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் நோயாளிகள் சுவாசித்து கொண்டிருந்தனர்.  அப்போது ஒரு சில ஆம்புலன்சுகளில் சிலிண்டர்களில் இருந்த ஆக்சிஜன் திடீரென தீர்ந்து போனது. இதனால் சுவாசம் தடைபட்டு கொரோனா நோயாளிகள் மூச்சுவிட சிரமப்பட்டு 3 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ்சிலேயே நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே 6 பேர் இறந்த நிலையில் நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்