சாலை விபத்தில் பலியான பல் மருத்துவரின் உடலுறுப்புகள் தானம்

வேளச்சேரி: கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் ஜோஷ்வா (28), வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி, தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 11ம் தேதி இரவு அதே பகுதியில் பைக்கில் சென்றபோது, தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக, ஜோஷ்வாவின் தாய் செலின் மனோகரதாஸ் மற்றும் சகோதரர் ஜொனத்தன் தாஸ் ஆகியோர், ஜோஷ்வாவின் உடல் உறுப்புகளை   தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, அவரின் 2 சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், கணையம், இதயம் மற்றும் இதய வால்வுகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் தனியாக எடுத்து, தேவைப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கினர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை