சாலை மறியலில் ஈடுபட்ட 71பேர் மீது வழக்குப்பதிவு

சேலம், ஜூன் 23: சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் சுங்கவரியை மாநகராட்சியே வசூல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்றுமுன்தினம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற 14 பெண்கள் உள்பட 71 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அனுமதியில்லாமல் மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கிராம நிர்வாக அதிகாரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் மோகன், ஷானவாஸ்கான் உள்பட 71பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி