சாலை பாதுகாப்பு போதை பொருள் தீமை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர்,டிச.3: திருவாரூர் தனியார் பெண்கள் மேல்நிலைபள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எஸ்பி ஜெயக்குமார் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும், பெண்கள் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்துடன் இருந்து நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் எனவும், இவ் உலகில் பெண்கள் கௌரவமாகவும், கம்பிரமாகவும் வாழ வேண்டும் எனில் பெண்களுக்கு கல்வி அவசியம் எனவும், பெண்கல்வி வீட்டுக்கும் நாட்டுக்கும் அவசியம் எனவும் எடுத்து கூறினார்.

மேலும் பான்மசாலா மற்றும் குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள், எதிர்கால பாதிப்புகள் மற்றும் உடல் உபாதைகள் குறித்தும், அதனால் சமுதாயத்திற்கு ஏற்படும் சீர்கேடுகள் குறித்தும் எடுத்து கூறினார். மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் எடுத்து கூறி விழிப்புணர்வு உரையாற்றினார்.

Related posts

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி; 3 பேர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு திடீரென தீப்பிடித்த வேப்பமரம்