சாலையோர வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

 

திருப்பூர், நவ. 19:சாலையோர வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தார். உதவி ஆணையர் சுல்தானா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இது குறித்து கமிஷனர் பவன்குமார் கூறியதாவது:

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 1250க்கும் மேற்பட்டவர்கள் வரை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி பகுதிகளில் வியாபாரம் செய்யும் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களில் அவர்களுக்கு கழிவறை வசதி மற்றும் பொருட்களை இருப்பு வைக்கும் அறை போன்றவை செய்து கொடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை