சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 

மதுரை, ஜூலை 7: மதுரையின் பிரதான சாலையான காளவாசல் பைபாஸ் சாலையில் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருந்த கடைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். அப்பகுதியில் அதிக அளவு சாலையோர கடைகள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவதால் நெரிசல் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதன்பேரில், மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி மாலையில் சிற்றுண்டி முதல் துரித உணவு வரை விற்பனை செய்து வந்த அனுமதியற்ற கடைகள் அகற்றப்பட்டன.

இதன்படி, 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். சில கடைகளின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அகற்றிக்கொண்டனர். உரிமையாளர் இல்லாத தள்ளுவண்டிக் கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டு மாநகராட்சி நீரேற்று நிலையம் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை