சாலையில் சென்றவரிடம் செல்போன், பணம் பறிப்பு: வாலிபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரயிலிலிருந்து இறங்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவரிடம் இருந்து  ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் செல்போன் மற்றும் ரூ5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினார். அப்போது, இரவு ரோந்து பணியிலிருந்த போலீசார் அவரை மடக்கி கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த கந்தன் கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(46), நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு 10.30 மணியளவில் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி திருவள்ளூர், ஆவடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.  அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முருகேசனை வழிமடக்கி அவரிடமிருந்து விலையுயர்ந்த செல்போன் மற்றும் ரூ5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். அப்போது செவ்வாப்பேட்டை போலீசார் அந்த பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் முருகேசன் புகாரளித்தார். இதனையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் விலையுயர்ந்த செல்போன் மற்றும் ரூ5 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை ராஜேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த சத்யா(19) என்பவதும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சத்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழிப்பறி நடந்த ஒரு சில மணி நேரங்களிலேயே குற்றவாளியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.  …

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!