சாலையில் குட்டிகளுடன் நடை போட்ட சிங்கங்கள்: வீடியோ காட்சி வைரல்

அகமதாபாத்:  குஜராத்தில் 5 சிங்கங்கள் சாலையில் நள்ளிரவில் சுற்றி வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் அமேர்லியில் பிபவாவ் சாலையில் 2 குட்டி சிங்கங்கள் உட்பட மொத்தம் 5 சிங்கங்கள் நடந்து செல்கின்றது. இரவு நேரத்தில் இரை தேடி சிங்கங்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளன. சாலையில் இங்கும் அங்குமாக சுற்றித்திரிந்த அவை அந்த பகுதிக்குள் இருக்கும் துறைமுகத்துக்குள் நுழைந்தன. இதனை பார்த்த ஊழியர்கள், அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கினர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சாலையில் யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் ஏற்படுத்தாமல் சிங்கங்கள் அமைதியாக நடந்து செல்லும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அம்ரேலி மாவட்டத்தில் பிரபல கிர் காடுகள் அமைந்துள்ளது. இந்த காடுகள் ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது. இந்த காட்டில் வனத்துறை தகவலின்படி மாநிலத்தில் சிங்கங்களின் எண்ணிக்கையானது 710 முதல் 730 ஆகும். …

Related posts

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு

ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம்