சாலைப்பணியாளர் ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, டிச.8: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் தொழிற்சங்க விரோதப் போக்கை கைவிட வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் இறந்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் மாரி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் முத்தையா, மாவட்டத் துணைத் தலைவர்கள் சின்னப்பன், கணேசன், பாலசுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலாளர்கள் பாண்டி, ராஜா, சிவக்குமார், சுதந்திரமணி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார். இதில் ஏராளமான சாலைப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை