சாய்ந்த மின் கம்பங்கள்..முறிந்து விழுந்த மரங்கள்!: தென்கொரியாவை புரட்டிப்போட்ட ஹின்னம்னோர் புயல்.. 2 பேர் பலி..10 பேர் மாயம்..!!

தென்கொரியா: அதிவேக புயலான ஹின்னம்னோர் தென்கொரியாவின் உள்சா நகரத்தை புரட்டிபோட்டுள்ளது. கடந்த சில நாட்களாக துருக்கி வந்த ஹின்னம்னோர், தென்கொரியாவின் தென் கடலோர பகுதியை உக்கிரமாக தாக்கியது. அப்போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் பெருமழை பெய்ததால், தென்பகுதி நகரங்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. உள்சா நகரத்தில் நூற்றுக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துவிட்டன. புயல் உள்சா நகரம் முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. புயல், மழை, வெள்ளம் எதிரொலியாக பெண்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். வெள்ளம் அடித்து சென்றதில் காணாமல் போன 10 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். புயல், மழை காரணமாக 600க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. 250க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கடந்துவிட்டதை அடுத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தென்கொரிய அரசு முடுக்கிவிட்டுள்ளது. தென்கொரியாவில் கரை கடந்த ஹின்னம்னோர் புயல், அண்டை நாடான ஜப்பானின் தென்மேற்கு நகரமான ஃபிகுவாகா-வை தாக்கியது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 124 விமான சேவைகளை ஜப்பான் அரசு ரத்து செய்துள்ளது. ஹக்காட்டா- குமாமோட்டா இடையே புல்லட் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சற்றே விலகிய புயல் வடக்கு பகுதியில் நகர்ந்து கியாஸு மற்றும் சிகாகோ நகரங்களை தாக்கியது. பின்னர் வலுவிழந்த நிலையில், ஹின்னம்னோர் ஜப்பான் கடல்பகுதியை கடந்தது. இதையடுத்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையை ஜப்பான் அரசு முடுக்கிவிட்டிருக்கிறது. …

Related posts

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ரஷ்யர்களுக்கு அழைப்பு வேலை இடைவேளை நேரத்திலும் கணவன்-மனைவி ஒன்றாக இருங்கள் : அதிபர் புடின் அரசு அமர்க்கள அறிவிப்பு

நியூயார்க்கில் புகழ் பெற்ற இந்து கோயில் மீது தாக்குதல்

லெபனான், சிரியாவில் பெரும் பதற்றம் பேஜர்கள் வெடித்து 8 பேர் பலி: ஈரான் தூதர், 2750 பேர் படுகாயம்: ஹிஸ்புல்லா குழுவினரை குறி வைத்து தாக்குதல்; நவீன தொழில்நுட்பம் மூலம் இஸ்ரேல் நடத்தியதா?